Pages

Search This Blog

Monday, 16 May 2011

புதிய படங்களை டவுன்லோட் செய்ய உதவும் U Torrent மென்பொருள் புதிய பதிப்பு -3.0 build 25220

நாம் இணையத்தில் இருந்து மென்பொருட்களையோ அல்லது சினிமா படங்கள் போன்ற பெரிய பைல்களை டவுன்லோட் செய்யும் போது அவைகளை டோரென்ட் பைல்களாக டவுன்லோட் செய்வோம். டோரென்ட் பைல்களில் இருந்து நம் கணினியில் நேரடியாக டவுன்லோட் செய்ய முடியாது. அதற்க்கு தான் அனைவரும் இந்த U Torrent மென்பொருளை பயன்படுத்தி டவுன்லோட் செய்கிறோம். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமான மென்பொருளாகும். தற்போது இந்த மென்பொருளின் உள்ள வசதிகளை மேம்படுத்தி தனது புதிய பதிப்பை (U Torrent 3.0 Beta) இந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
மென்பொருளின் புதிய வசதிகள்:


  • புதிய பதிப்பில் ஒரு சூப்பர் வசதிகள் உள்ளது. அதாவது நாம் ஏதேனும் ஒரு வீடியோ அல்லது ஆடியோ பைலை டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் போதே அந்த பைலை ஓபன் செய்து வீடியோ சரியாக இயங்குகிறதா என பார்த்து கொள்ளலாம். 
  • இதனால் நாம் டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் போதே அந்த வீடியோ சரியாக இயங்க வில்லை அந்த வீடியோவின் தரம் பிடிக்கவில்லை என்றால் அப்பொழுதே அந்த டவுன்லோடை நிறுத்தி விடலாம். இதனால் நம் நேரமும் இன்டர்நெட் உபயோகமும் சேமிக்க படும்.
  • இன்னொரு வசதி நாம் டவுன்லோட் செய்யும் வீடியோவுக்கு இந்த மென்பொருளிலேயே மதிப்பெண் (Ratings) கொடுக்கலாம். இதனால் தரம் குறைந்த வீடியோக்கள் தவிர்க்கப்படும். 
  • மற்றும் நாம் டவுன்லோட் செய்யும் வீடியோவை மற்றவகளுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி.
  • இப்படி ஏராளமான வசதிகள் இந்த மென்பொருளின் பதிய பதிப்பில் வந்துள்ளது. 
இன்ஸ்டால் செய்யும் முறை:

  • முதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • பின்பு வரும் .exe பைலை இரண்டு முறை க்ளிக் செய்து மென்பொருளை கணினியில் நிறுவுங்கள் . 
  • மென்பொருளை நிறுவும் போது கீழே உள்ள படங்களின் படி டிக் மார்க்கை நீக்கி விடவும்.

  • இந்த இரண்டு படங்களில் உள்ள விண்டோ வரும்போது மட்டுமே இதில் உள்ள மாதிரியே டிக் குறியை நீக்கி விடவும்.
  • மற்ற விண்டோக்களில் Next கொடுத்துக்கொண்டு செல்லலாம்.


  • முடிவில் இன்ஸ்டால் என்ற பட்டனை அழுத்தியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இனைந்து விடும். 
  • இனி இந்த மென்பொருளை பயன்படுத்தி இணையத்தில் இருந்து பைல்களை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment