Pages

Search This Blog

Monday, 16 May 2011

கணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்!


கணினியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே பயம் வைரஸ் தான். வைரஸ் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்றே தெரியாது. சிலரின் கணினிகளில் வைரஸ் தாக்கிய விசயமே தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பர். வைரஸ்களின் நோக்கமே உங்கள் கணினியை செயல் இழக்க வைத்து பாழ்படுத்துவதே. வைரஸ்கள் வந்த பின்னர் கணினியை திரும்ப நல்ல நிலைக்கு மீட்பதை விட முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது தான் நலம். கணினியை பாதுகாப்பாக வைக்க என்ன வழிகள் என்று பார்ப்போம். 

கீழ்வரும் மூன்று மென்பொருள்களின் உதவியோடு கணினியை மிக்க பாதுகாப்போடு வைத்திருக்க முடியும். இந்த மூன்று மென்பொருள்களும் இருப்பின் உங்கள் கணினியில் வைரஸ்க்கு நோ சொல்லலாம்.

1 . Avast Antivirus


முதலில் கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் கண்டிப்பாய் இருந்தாக வேண்டும்.சில வருடங்களாய் பல ஆண்டிவைரஸ் மென்பொருள்களை சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறேன். Avast,Avira, AVG, Nod32, Escan, Comodo, K7, Kaspersky போன்றவற்றை பணிச்சூழலில் பயன்படுத்திருக்கிறேன். இவற்றில் சில கட்டண மென்பொருள்களும் சில இலவசமும் இருக்கின்றன.

எவருமே இலவசம் என்றால் தான் விரும்புவார்கள். இலவசமாக தரப்படுவதில் Avast ன் பயனர் இடைமுகமும் பாதுகாப்பும் சிறப்பாக உள்ளது. இப்போது இதன் புதிய பதிப்பாக 6 வெளிவந்துள்ளது. இதன் வைரஸ்களை கையாளும் விதம் மற்ற இலவச மென்பொருள்களான Avira, AVG போன்றவற்றை விட நன்றாக உள்ளது. பென் டிரைவை போட்டவுடன் வைரஸ் இருப்பின் பிடித்து அழித்துவிடுகிறது.


எந்த போல்டருக்கும் ட்ரைவுக்கும் சென்றாலும் தானாக ஒருமுறை சோதித்து கண்டுபிடிக்கிறது. இதில் Mail shield, web shield, Network shield இன்ன பிற பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.இதனை பயன்படுத்துவதும் எளிமையான விஷயம் தான். ஒருமுறை ஆன்லைனில் பதிவு செய்துவிட்டால் ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம். ஒரு வருடம் முடிந்த பின்னர் திரும்ப இலவசமாக பதிவு செய்திடலாம்.
தரவிறக்கச்சுட்டி : http://www.avast.com/free-antivirus-download
பதிவு செய்ய : http://www.avast.com/registration-free-antivirus.php

கட்டண மென்பொருள்களில் கண்டிப்பாக Kaspersky தான். இதன் செயல்பாடும் சிறப்பாக உள்ளது. ஒரு வருடத்திற்கான தனிநபர் பயன்பாட்டுக்கு 450 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. இல்லை காசில்லாமல் வேண்டும் என்றால் இதன் கிராக் மென்பொருளை இணையத்தில் தேடி பயன்படுத்தலாம்.

2 . USB Disk Sequrity


வைரஸ்கள் பெரும்பாலும் நுழைவதே பென் டிரைவ் , மெமரி கார்டுகள் போன்றவற்றால் தான். இவற்றை கட்டுப்படுத்தினாலே ஓரளவுக்கு கணினியும் பாதுகாப்பாக இருக்கும். பென் ட்ரைவைப் போட்டவுடன் தானாக ஸ்கேன் செய்து பெரும்பாலான வைரஸ்களை இந்த மென்பொருளின் மூலம் நீக்கிவிடலாம்.

autorun.inf, Newfolder.exe போன்ற பல வைரஸ்களை இதன் மூலம் எளிதாக நீக்கிவிடலாம். இதனால் உங்கள் கணினிக்கு வைரஸ்கள் பரவும் வாய்ப்பு குறைகிறது.

தரவிறக்கச்சுட்டி : http://www.4shared.com/file/2vIMS1st/USB-Disk-Security53020-latest-.html (இந்த கோப்பிற்கு உள்ளேயே பதிவு செய்வதற்கான பெயரும் லைசென்ஸ் எண்ணும் உள்ளது)

3. WinPatrol


இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள இயல்பான அமைப்புகளை சோதித்து சேமித்துக் கொள்கிறது. பின்னர் கணினியில் எதாவது வைரஸ்கள், இணையத்திலிருந்து வருகிற மால்வேர்கள் எதாவது மாற்றங்களை உங்களுக்கு தெரியாமல் ஏற்படுத்துகிற போது தடுத்து நிறுத்தி உங்களுக்கு தெரியப்படுத்துகிறது.

பொதுவாக வைரஸ்கள், மால்வேர்கள் கணினியின் Startup, Registry, Scheduled Tasks, Services போன்ற பகுதிகளில் நுழைந்து தங்களது இயக்கத்தை பரப்புகின்றன. இந்த பகுதிகளில் எந்த மாற்றங்களை செய்தாலும் அதனை உடனடியாக உங்களிடம் தெரிவிக்கின்றன.


மேலும் இதன் மூலம் தற்போது இயங்கும் மென்பொருள்கள், சமிபத்திய கோப்புகள், Cookies, services, Scheduled tasks, startup, Hidden files போன்ற விசயங்களை தெளிவாக அறிய முடியும். இது சிறப்பாக செயல்படும் இலவச மென்பொருளாகும். இதன் மூலம் உங்கள் கணினியை 100 சதவீதம் பாதுகாப்பாக வைக்க முடியும்.

தரவிறக்கச்சுட்டி : http://www.winpatrol.com/download.html

இந்த மூன்று மென்பொருள்களையும் கணினியில் நிறுவிவிட்டு ஹாயாக வேலை செய்யுங்கள். உங்கள் கணினியில் வைரஸ்க்கு 'நோ' சொல்லுங்கள்!

No comments:

Post a Comment